பேருந்துகளில் விரைவில் gpay, மொபைல் ஸ்கேனிங் முறைகளில் டிக்கெட் பெறலாம் : அமைச்சர் சிவசங்கர்

By Irumporai Jun 06, 2022 01:07 PM GMT
Report

தமிழக பேருந்துகளில் டிக்கெட் பெறுவதற்கு விரைவில் கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார் .

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் பேருந்தில் பயண சீட்டு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் அமலபடுத்தப்பட்டு மகளிரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயகத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் : பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

பேருந்துகளில் விரைவில் gpay, மொபைல் ஸ்கேனிங் முறைகளில் டிக்கெட் பெறலாம் : அமைச்சர் சிவசங்கர் | Students Can Travel By Bus Minister Sivasankar

ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

‘முகமது நபிகள் குறித்து இழிவான கருத்து: உலகளவில் இந்தியாவின் நிலையை பாஜக கெடுத்துவிட்டது’ - ராகுல் காந்தி

பேருந்துகளில் விரைவில் gpay, மொபைல் ஸ்கேனிங் முறைகளில் டிக்கெட் பெறலாம் : அமைச்சர் சிவசங்கர் | Students Can Travel By Bus Minister Sivasankar

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். பள்ளி வாகனங்களில் கேமராக்கள் முன்னும் பின்னும் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப்படும் எனக் கூறினார்