13 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உட்பட 12 பேர் - பகீர் பின்னணி!
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிக்கு கொடூரம்
செங்கல்பட்டு, பல்லாவரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தாயும், தந்தையும் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இதனை அறிந்த சிறுவன் ஒருவர் தண்ணீர் கேன் போடுவது போல் சிறுமி வீட்டிற்கு சென்று அவ்வப்போது பேசி வந்துள்ளான். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
12 பேர் கைது
தொடர்ந்து தனது நண்பர்கள் சிலரை அறிமுகம் செய்து வைத்ததும், அவர்களும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை, அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். உடனே இதுகுறித்து விசாரித்ததில் சிறுமி நடந்ததை கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், சஞ்சய், நிக்சன், எஸ்.சஞ்சய், முடிச்சூரை சேர்ந்த சூர்யா மற்றும் 7 சிறுவர்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து, இளைஞர்கள் 5 பேரை புழல் சிறையிலும், சிறுவர்கள் 7 பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்துள்ளனர்.