12 வயது சிறுமியை 36 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த தாய்..!

Marriage Uttarakhand
5 நாட்கள் முன்

12 வயது சிறுமியை 36 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த தாயை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை திருமணம்

உத்தரகாண்ட் மாநிலம் பிதோரொகிரா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை 36 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்ததாக குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

12 வயது சிறுமியை 36 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த தாய்..! | 12 Year Child Girl Married36 Year Old Man

விசாரணையில் அந்த சிறுமி அதேபகுதியை சேர்ந்த 36 வயது நபருக்கு கடந்த சில மாதங்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது தெரியவந்தது.

தாய் மற்றும் கணவர் கைது

மேலும், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 12 வயது சிறுமியை திருமணம் செய்த 36 வயது நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில், தனது 12 வயது மகளை 36 வயது நபருக்கு திருமணம் செய்து கொடுத்த சிறுமியின் தாயை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தந்தை இறப்பு: அம்மாவை தாத்தா பாலியல் தொந்தரவு செய்கிறார் -கதறிய சிறுமி!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.