வகுப்பில் பேச மறுத்த தோழி.. 12ம் வகுப்பு மாணவி எடுத்த வீபரித முடிவு - பள்ளியில் என்ன நடந்தது?
12ம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவி
ஆந்திர மாநிலத்தைச் சேந்தவர் 17 வயது பள்ளி மாணவி சின்ன திப்பமா . இவர் அங்குள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி இளநிலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வகுப்பில் சின்ன திப்பமா நெருங்கிய தோழியுடன் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் புத்தாண்டு தினத்திற்கும் தன்னுடைய தோழி வாழ்த்துக் கூறாததால் சின்ன திப்பமாவேதனையிலும், மன அழுத்தத்திலும் இருந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் பள்ளி வளாகத்தில் மாணவி திம்மம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் , ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தற்கொலை
புகாரின் அடிப்பையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பள்ளி மாணவி சின்ன திப்பமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் காவல் துறையின் முழு விசாரணைக்குப் பிறகு பள்ளி மாணவி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.