350 மில்லி விஸ்கி குடித்தவர் உயிரிழப்பு..பிறந்தநாள் பார்ட்டியில் நேர்ந்த சம்பவம் -பகீர் பின்னணி!

Thailand Crime Death
By Vidhya Senthil Jan 01, 2025 11:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 பிறந்தநாள் பார்ட்டியில் விஸ்கி குடித்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் தன்கரின் கான்த் (வயது 21). இவர் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கு மதுவிருந்து கொண்டாட்டம் நடந்துள்ளது.

விஸ்கி குடித்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம்

அப்போது,ஒரு நபர் ஒரே நேரத்தில் 350 மில்லி அளவுள்ள இரண்டு விஸ்கி பாட்டிலைக் குடித்தால், ரூ.75 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்ற போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தன்கரின் கான்த் ஆர்வமாகக் கலந்து கொண்டு 20 நிமிடத்தில் இரண்டு பாட்டிலை காலி செய்துள்ளார்.

1 வயது குழந்தை கழுத்து அறுத்துக் கொலை..ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம் - பகீர் பின்னணி!

1 வயது குழந்தை கழுத்து அறுத்துக் கொலை..ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம் - பகீர் பின்னணி!

பின்னர் போட்டியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், வரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 உயிரிழந்த சம்பவம்

இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் தன்கரின் கான்த் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பிரேதப் பரிசோதனையின் முடிவில் அவர் மாரடைப்பு ஏற்பட்டுப் பலியானது தெரியவந்தது.

விஸ்கி குடித்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம்

மேலும் போதைப்பொருள் உடல்நலனுக்கு நீண்ட கெடுதலை தரும் என்பது உண்மை எனினும், அதனை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடனடி மரணமும் நேரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.