பாத்ரூம் சென்ற மாணவி..பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ- நடுங்க வைக்கும் கொடூரம்!
கைப்பந்து போட்டியில் கலந்துகொண்ட +2மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 25-ம் தேதி கைப்பந்து போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக 14 மாணவிகளை உடற்பயிற்சி ஆசிரியர் திருச்சிக்குச் சென்றுள்ளார்.
பின்னர் போட்டி முடிந்து 26-ம் தேதி இரவு 9-மணிக்கு மாணவிகள் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர்.அப்போது மற்ற மாணவிகளை அழைத்துச் செல்வதற்காகப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த மாணவியின் தந்தை வரத் தாமதமாகி உள்ளது.
தண்ணீர் டிரம்மில் சடலமாகக் கிடந்த 2 சிறுமிகள்..54 வயதுடைய நபர் செய்த கொடூரம்- கதி கலங்க வைக்கும் சம்பவம்!
இதனால் அவர் பள்ளி வளாகத்தை விட்டு சாலையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏன் இங்கு நிற்கிறாய்' எனக்கேட்டுள்ளார்.அதற்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என அந்த மாணவி கூறியுள்ளார்.
17 வயது மாணவி
உடனே அந்த நபர் அருகில் உள்ள வீட்டைக் காண்பித்து அது என்னுடைய வீடு தான் அங்கு பாத்ரூம் செல்ல கூறியுள்ளார். இதனை நம்பி அந்த மாணவி சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த நபர் மாணவியிடம் வலுக்கட்டாயமாக இழுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் வழி தாங்க முடியாததால் கதறிக் கத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி பலமாகக் கத்தியதால் வெளியே அனுப்பி உள்ளார். பின்னர் அழுதபடி வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தந்தையிடம் சொல்லியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் மணலிக்கரையைச் சேர்ந்த பைசல் கான் (37) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.