கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா? - மனித மாமிசத்தை உண்டது உண்மையா வெளியாகும் திடுக்கிடும் தகவல்

Kerala
By Thahir Oct 13, 2022 10:21 AM GMT
Report

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் காணாமல் போன நிலையில் அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

2 பெண்கள் நரபலி 

கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் தமிழகத்தில் காணமால் போன பெண் உட்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு அவர்களின் மாமிசத்தை உண்டதாக பல திடுக்கிடும் தகவல் வெளியாகி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இச்சம்பம் குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கை கொச்சி நகர காவல் துணை ஆணையர் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணை மேற்கொள்ள கேரள மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Human sacrifice

மேலும் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதில் ஒரு பெண் 56 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக முகமது ஷபி, பகவத் சிங், லைலா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல் போன பெண்களின் நிலை என்ன?

மேலும் போலீசாரின் விசாரணையில் கடந்த சில நாட்களில் மட்டும் 12 பெண்கள் காணாமல் போனது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே காணாமல் போன பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட கொடூர சம்பவத்தை தொடர்ந்து காணாமல் போன 12 பெண்களின் நிலைமை குறித்தும் மக்கள் பரபரப்பாக பேச தொடங்கியுள்ளனர்.