கேரளாவை உலுக்கிய நரபலி: சாமியார் முன் உடலுறவு? சடலத்தை சாப்பிட்ட கொடூரம்!
இருபெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
நரபலி
கேரளா, எர்ணாகுளம் காலடி பகுதியை சேர்ந்த லாட்டரி வியாபாரியான ரோஸ்லின் (50) மற்றும் தமிழகத்தின் தர்மபுரி மாவட்ட பகுதியை சேர்ந்த பத்மா (54) என்ற மற்றொரு லாட்டரி வியாபாரி என மர்மமான முறையில் 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், 2 பேரும் கொடூர முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் முகமது ஷபி என்ற ஷிகாப்பு (வயது 48), திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியர் பகவல் சிங் என்ற பகவந்த் (55), பாரம்பரிய மசாஜ் சிகிச்சை நிபுணரான இவரது மனைவி லைலா (52) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
நடந்தது என்ன?
பகவந்துக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இருந்த அவர், முகமது ஷபியின் அறிமுகம் ஏற்பட்ட பின்பு, பெண்களை நரபலி கொடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, விசாரணையில் இந்த தம்பதியினரை போலி சாமியாரான முகமது ஷபி முன் உடலுறவு கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், ரோஸ்லின், பத்மா ஆகிய இருவரையுமே வெவ்வேறு நாட்களில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி முகமது ஷாஃபி, தம்பதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சினிமா ஷூட்டிங் நடைபெறுவதாக கூறி அவர்களை ஆடைகள் இல்லாமல் கட்டிலில் கட்டி வைத்து,
நீதிமன்ற காவல்
சுத்தியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து இருவரின் சடலங்களையும் 60க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி சாப்பிட்டுள்ளனர். பின்னர் இரு பெண்களையும் கத்தியால் கீறி அந்த ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
தற்போது மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.