தலைவிரித்தாடும் மூடநம்பிக்கை.. 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரம்!
பணக்காரனாக வாழ ஆசைப்பட்டு இளைஞர்கள் சிறுவனை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூடநம்பிக்கை
தெற்கு, டெல்லி பகுதியில் லோனி காலனி உள்ளது. இங்கு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதில் பீகாரைச் சேர்ந்த அமீர்குமார் மற்றும் விஜயகுமார் என்ற இளைஞர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இவர்களுடன் வேலை பார்த்து வந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த இளைஞர்கள் நரபலி கொடுத்தால் வசதியாக வாழலாம் என நம்பி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்த 6 வயது சிறுவனை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
சிறுவன் கொலை
எனவே, அந்த சிறுவனிடம் பேசி போதை பொருளை கொடுத்து மயங்க வைத்து குடிசைக்கு கொண்டு வந்துள்ளனர். அதன் பின்னர் கத்தியை எடுத்து சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதனிடையே மகனை தேடிய அலைந்துள்ளனர் பெற்றோர்.
சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கட்டிட பணியாளர்கள்தான் கொலை செய்தது என்பது தெரிய வந்தது. அந்த இளைஞர்களை கைது செய்து விசாரித்ததில் பணக்காரனாக வாழ கடவுள் சிறுவனை பலி கொடுக்க கூறியதாகவும் அதனால் சிறுவனை கொன்றதாகவும் கூறியுள்ளனர்.