நரபலி கொடுக்க இழுத்துச்சென்ற கணவன் - கடைசிநேரத்தில் தப்பியோடிய மனைவி
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் அடிக்கடி சுடுகாடு பக்கம் போவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
இது மனைவி மீனாவிற்கு சந்தேகத்தை கொடுத்து வந்திருக்கிறது. பூஜை, மந்திரம் என்று எந்நேரமும் கணவன் இருப்பதால் ஏதோ பக்தியில் தீவிரமாக இருக்கிறார் என்று நினைத்து வந்திருக்கிறார்.
ஒருநாள் பெண் மந்திரவாதி உடன் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டிற்கு வந்ததும் அந்த பெண் மந்திரவாதி பூஜை அறையில் உட்கார்ந்து பூஜைகள் செய்ய கணவன் அதற்கு உதவி செய்து வந்திருக்கிறார்.
அப்போது திடீரென்று அந்தப் பெண் இப்போது யாரையாவது நரபலி கொடுத்தால் உனக்கு புதையல் கிடைக்கும். புதையல் கிடைக்க வேண்டுமென்றால் நீ நரபலி கொடுத்தாக வேண்டும் என்று சொன்ன உடனேயே அவர் மனைவி பக்கம் திரும்ப, மனைவி மீனா மிரண்டு போய் நிற்க எனக்கு புதையல் கொடுக்க வேண்டுமென்றால் நீ உன்னை நரபலி கொடுத்தாக வேண்டும்.
நான் நன்றாக வாழ்வதற்காக சம்மதம் என்று சொல் என்று கேட்க அதிர்ச்சி அடைந்த மீனா மறுப்பு தெரிவித்திருக்கிறார். அவரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து பூஜையில் உட்கார வைத்திருக்கிறார். கொஞ்ச நேரம் சம்மதம் என்பது போல அமர்ந்திருந்த மீனா, கொஞ்சம் அசந்த நேரத்தில் கணவனை பிடித்து தள்ளி விட்டு வீட்டை விட்டு வெளியேறி ஓடி வந்து தந்தை வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அங்கே அழுதுகொண்டே தனக்கு நடந்தவற்றைச் சொல்ல அதிர்ந்து போன அவர்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீசார் விரைந்து சென்று மீனாவின் கணவர் சந்தோஷ் பெண் மந்திரவாதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அந்தப் பெண் மந்திரவாதி வேறு யாரையாவது நரபலி கொடுத்து இருக்கிறார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.