12 மெக்டொனால்டு உணவகங்கள் மூடல் - வெளியான அதிர்ச்சி காரணம்!
McDonald's
Sri Lanka
By Sumathi
கொழும்பில் 12 மெக்டொனால்டு உணவகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெக்டொனால்டு
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, இலங்கையிலுள்ள 12 மெக்டொனால்டு உணவகங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளன.
மோசமான தரம்
அபான்ஸ் நிறுவனம், இலங்கையில் அதனுடைய தரத்தை தக்க வைக்காததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மெக்டொனால்டு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.