6 மாத சிறுமிக்கு நடந்த கொடுமை; குடிபோதையில் இருந்த தாய், தந்தை -அண்ணனும் கூட்டு!
11 வயது சிறுமியை 6 மாதமாக தொடர்ந்து மூவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமிக்கு கொடுமை
சென்னையில் உள்ள வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதுடைய மகள் ஒருவர் உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் குடிபோதைக்கு அடிமைகளான காரணத்தால் அவர்களது மகளை சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளனர். இதனால் சிறுமி பாட்டியின் கவனிப்பில் வளர்ந்துள்ளார்.
இதற்கிடையில் ஒருநாள் சிறுமிக்கு அவரது அந்தரங்க உறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. உடனே பாட்டியிடம் சொல்லி கதறியுள்ளார். பதறிப்போன பாடி அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தான் திடுக்கிடும் தகவல் ஒன்று தெரியவந்தது.
குடிபோதையில் தாய்,தந்தை
அதாவது அந்த சிறுமி 6 மாத காலமாக தொடர்ந்து மூவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக றுமியின் பாட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை பெரியப்பா மகனான அண்ணன் முறை சிறுவன், அவருடைய நண்பனான மற்றொரு சிறுவன்,
தையல் கடைக்கார முதியவர் என 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பா , அம்மாவிடம் கூறிய போது அவர்கள் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.
அவ்வப்போது சிறுமிக்கு தின்பண்டங்களை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று மூவரும் இந்த கொடுமையை செய்திருக்கிறார்கள். அதிலும் அந்த தையல் கடை முதியவர் மது போதையில் இருந்த போதெல்லாம் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்த நிலையில், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.