10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் - புதுமனை புகுவிழாவில் திருமணமான நபர் வெறிச்செயல்!
திருமணமான நபர் ஒருவர் 10-வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
காஞ்சிபுரம் மாவட்டம் நெய்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் ஒருவரின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது விழாவிற்காக அங்கு வந்திருந்த 10-ம் வகுப்பு மாணவியை, சின்ராசு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து,
மாணவி கர்ப்பம்
அவரது பெற்றோர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளனர். அதில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது, மாணவி தனக்கு நடந்ததை கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகாரில் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சின்ராசுவை தேடி வருகின்றனர்.