இரவில் தனியாக செல்லும் வாலிபர்கள்; ஆசை காட்டி அட்டகாசம் - 14 இளம்பெண்கள் கைது!

India Crime Punjab
By Jiyath Mar 23, 2024 10:56 AM GMT
Report

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 14 இளம்பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

கொள்ளை சம்பவம் 

பஞ்சாப் மாநிலத்தின் பியாஸ் நகரைச் சேர்ந்த வரீந்தர் சிங் என்பவர் இரவில் செல்லும்போது, இளம்பெண்கள் சிலர் அவரிடம் வழிப்பறி செய்துள்ளனர். இதேபோன்று சத்னம்புரா பகுதியைச் சேர்ந்த அரவிந்தர் குமார் என்பவருக்கும் இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டது.

இரவில் தனியாக செல்லும் வாலிபர்கள்; ஆசை காட்டி அட்டகாசம் - 14 இளம்பெண்கள் கைது! | 14 Young Girls Of Robbery With Knife Punjab

இதுகுறித்து அவர்கள் இருவரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். அதில் "பக்வாரா நகரில் ஜி.டி சாலையில் இரவில் தனியாக செல்லும் ஆண்களை இளம்பெண்கள் சிலர் ஆசை காட்டி தனியாக அழைத்துச் சென்று, கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

பைக் டாக்சியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - சென்னையில் பரபரப்பு!

பைக் டாக்சியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - சென்னையில் பரபரப்பு!

14 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து சத்னம்புரா காவல் நிலைய உயரதிகாரி கவுரவ் தீர் கூறுகையில் "இளம்பெண்கள் சிலர் கத்திகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் இந்த பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களில் சிலர் 20 வயதுடையவர்கள். மறைவான இடங்களில் பதுங்கிக் கொள்வார்கள். மறைவான இடங்களில் பதுங்கிக் கொள்வார்கள்.

இரவில் தனியாக செல்லும் வாலிபர்கள்; ஆசை காட்டி அட்டகாசம் - 14 இளம்பெண்கள் கைது! | 14 Young Girls Of Robbery With Knife Punjab

இதனை யாராவது பார்த்து, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, பொய்யான வழக்கில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டி அவர்களை இளம்பெண்கள் அனுப்பி விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 6 பேர் நைஜீரியா மற்றும் கானா நாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.