அக்காவுடன் பழகிய 12ம் வகுப்பு மாணவன் - ஆத்திரத்தில் 10ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்!
12ஆம் வகுப்பு மாணவரை 10ஆம் மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவன் வெறிச்செயல்
நெல்லை, சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், தன்னுடன் படிக்கும் மாணவியுடன் காதலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள். இந்த காதல் விவகாரம் மாணவியின் 10ஆம் வகுப்பு படிக்கும் சகோதருக்கு தெரிய வந்துள்ளது.
ஆணவக்கொலை முயற்சி?
இதனைத் தொடர்ந்து மாணவியின் சகோதரர் தனது நண்பர்களை கூட்டிச் சென்று, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். இதனால் படுகாயமடைந்த மாணவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உட்பட 5 சிறுவர்களை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.