விசாரிக்க சென்ற எஸ்.ஐ கொடூரமாக வெட்டி கொலை - என்ன காரணம்? ரூ.1 கோடி நிதியுதவி
விசாரிக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஐ. வெட்டிக்கொலை
திருப்பூர், அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மற்றும் மூத்த மகன் தங்கராஜாவும் மற்றொரு மகனும் வேலை செய்து வந்தனர்.
அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தந்தை மூர்த்தி, தங்கபாண்டி, மற்றொரு மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, தந்தை மகன்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. உடனே மூர்த்தி 100-க்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதில் ஆத்திரத்தில் மணிகண்டனும், தங்கராஜும் சண்முகவேலுவை ஓட ஓட வெட்டி உள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நிதியுதவி அறிவிப்பு
தற்போது தலைமறைவான தந்தை மூர்த்தி, மகன்கள் தங்கப்பாண்டியன் மற்றும் மணிகண்டனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு,
அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.