இங்க இருந்த பஸ் ஸ்டாப்பைக் காணோம் சார்; எவ்வளவு மதிப்பு தெரியுமா - மிரண்டு போன போலீஸார்!
பேருந்து நிழற்குடை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 லட்சம் மதிப்பு
பெங்களூரு முழுவதும் உள்ள பழைய பேருந்து நிழற்குடைகளை அகற்றி விட்டு புதிய நிழற்குடைகளை அமைக்க ப்ருஹத் மகாநகர பலிகே(பிபிஎம்பி) தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியுள்ளது.
இதன்படி காவல் துறை ஆணையர் அலுவலகம் அருகே கன்னிங்காம் பேருந்து நிறுத்தத்தில் 10 லட்சம் மதிப்புள்ள துருபிடிக்காத நிழற்குடை ஆக.21-ம் தேதி அமைக்கப்பட்டது.
மாயமான பஸ் ஸ்டாப்
அந்த நிறுத்தத்தில் அன்றாடம் ஆயிரக்கணக்கான பயணிகள் பானஸ்வாடி, லினகராஜபுரம் மற்றும் யெலஹங்கா போன்ற பல்வேறு இடங்களுக்கு பேருந்துகளில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தினர் ஆக.28-ம் தேதி சென்று பார்த்ததில், பேருந்து நிழற்குடை காணாமல் போயிருந்தது. அதனையடுத்து மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, தனியார் நிறுவனத்தின் துணைத்தலைவர் என்.ரவி ரெட்டி, ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
தொடர்ந்து, துகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிழற்குடையைத் திருடிச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.