பேருந்து நிழற்குடை மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!
Death
Pudukkottai
By Thahir
புதுக்கோட்டை மாவட்டம் லஞ்சமேடு பகுதியில் உள்ள பேருந்து நிழற்குடை மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4 பேர் உயிரிழப்பு
மதுரையில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார் லஞ்சமேடு என்ற இடத்தில் வந்த போது தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்து பேருந்து நிழற்குடை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த ஒருவர் ஆபத்தான நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணத்தவர்கள் விவரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil