குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - பகீர் பின்னணி!

Pregnancy Crime Bihar
By Sumathi Jan 11, 2025 04:38 AM GMT
Report

நூதன மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நூதன மோசடி

பீகார், நவாடா மாவட்டத்தை மையமாக கொண்டு கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - பகீர் பின்னணி! | 10 Lakh For Impregnating Childless Women Bihar

அதில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் தரப்படும் என்றும், ஒருவேளை அந்த பெண்கள் கர்ப்பமாகாவிட்டாலும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரசவத்திற்கு சென்ற பெண்..வயிற்றில் இருந்த தையல் ஊசி - குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

பிரசவத்திற்கு சென்ற பெண்..வயிற்றில் இருந்த தையல் ஊசி - குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

கும்பல் கைது 

இதனையடுத்து பலர் இந்த கும்பலை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது அவர்காளிடம் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்கியுள்ளனர். மேலும் முன்பதிவு கட்டணம், ஓட்டல் அறை கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர்.

குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - பகீர் பின்னணி! | 10 Lakh For Impregnating Childless Women Bihar

இதில் சில வாடிக்கையாளர்கள் ஃபோட்டோ அனுப்பிய நிலையில், அதனை வைத்து மிரட்டியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி பிரின்ஸ் ராஜ், போலா குமார் மற்றும் ராகுல் குமார் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த நூதன மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.