மது பாட்டில், டி.ஜே இல்லாத திருமணமா? ரூ.21 ஆயிரம் பரிசு - எங்கு தெரியுமா?
திருமணம் நடத்தும் குடும்பங்களுக்கு கிராம்ம ஒன்று பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
திருமணம்
பஞ்சாப், பதிண்டா மாவட்டத்தில், பல்லோ என்ற கிராம பஞ்சாயத்து செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5,000 மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் தங்களது பாரம்பரியத்தை மேம்படுத்தும் வகையில்,
திருமண விழாக்களில் மதுபானம் வழங்குவதை தவிர்ப்பது மற்றும் டி.ஜே போன்ற இசை நிகழ்ச்சியை நடத்த ஊக்குவிக்காத குடும்பங்களுக்கு ரூ.21,000 பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரூ.21,000 பரிசு
அதற்கான தீர்மானமும் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் மது அருந்துவதும், டிஜே இசைக்கப்படுவதும், பல்வேறு சண்டை சச்சரவுகளில் வந்து முடிந்துவிடுகிறது. இதனால் உறவுகள் சீரழிகின்றன. கல்யாணங்களில் டிஜே இசை சத்தமாக எழுப்பப்படுவதால், அது மாணவர்களின் படிப்பை பாதிக்கிறது.
எனவே, இந்த முடிவை எடுத்ததாக கூறுகின்றனர். மேலும், இங்கு இயற்கை எரிவாயு ஆலை அமைக்கவுள்ளனர். இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பஞ்சாயத்து சார்பில் விதைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
கிராமத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி, இது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.