பிரசவத்திற்கு சென்ற பெண்..வயிற்றில் இருந்த தையல் ஊசி - குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!
இரண்டு ஆண்டுகளாகப் பெண் ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா நகரில் ஹினா கான் என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி கர்ப்பமடைந்துள்ளார். மேலும் பிரசவத்திற்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி அன்று ஹினா கான் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

அதன் பிறகு அவ்வப்போது அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரைச் சந்தித்துள்ளார். அப்போது அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட தையல்களால் நேரங்களில் இது போன்ற வலி ஏற்படக்கூடும் என்று கூறியுள்ளனர். இது நாளடைவில் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹினா கான் கருவுற்றார். பின்னர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது ஹினா கான் வயிற்றில் ஒரு தையல் ஊசி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை மற்றும் தையல் ஊசியை அகற்றினர்.
வயிற்று வலி
இந்த ஊசியால் குழந்தை பலத்த காயம் அடைந்தது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் முதல் பிரசவத்தின் போது மருத்துவர்கள் அலட்சியத்தால் தவறுதலாகத் தையல் ஊசி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதன் காரணமாக தான் ஹினா கான் வயிற்றுவலியால் துடித்து வந்தது தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.