நடுவானில் சிதறிய ஹெலிகாப்டர்கள்; 10 பேர் பலி - பதைபதைக்க வைக்கும் காட்சி!
இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
மலேசியா, லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில் ராயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. அப்போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் காற்றாடி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில், ஏழு பேரை ஏற்றிச் சென்ற HOM M503-3 ரக ஹெலிகாப்டர் ஓடு பாதையில் கீழே விழுந்ததில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.
10 பேர் பலி
அதேபோல் மூன்று பேரை ஏற்றிச் சென்ற Fennec M502-6 ரக ஹெலிகாப்டர் நீச்சல் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. விபத்தில் உயி்ரிழந்த 10 பேரும் கடற்படை வீரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
At least 10 people k1lled when two military helicopters collided midair in Lumut, #Malaysia. pic.twitter.com/gR45qrwjVZ
— Arthur Morgan (@ArthurM40330824) April 23, 2024
தற்போது, அடையாளம் காண ராணுவ மருத்துவமனைக்கு சடலங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தை குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.