கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு!

Thoothukudi Festival Murugan
By Sumathi Aug 16, 2025 02:15 PM GMT
Report

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆடி கிருத்திகை

தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான

tiruchendur

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடலில் திடீரென ஏற்பட்ட அலையில் பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை போராடி மீட்டனர். இதில் கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற 13 வயது சிறுமி காலில் காயம் ஏற்பட்டது.

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து - 10 பக்தர்கள் பலி!

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து - 10 பக்தர்கள் பலி!

பக்தர்களுக்கு கால் முறிவு

அதே போல் சாத்தூரைச் சேர்ந்த மாரிசாமி, திண்டிவனத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, கமுதியைச் சேர்ந்த அன்னலெட்சுமி, மதுரையைச் சேர்ந்த ஆனந்தவல்லி உள்பட 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! | 10 Devotees Suffer Broken Legs Sea Tiruchendur

இதனையடுத்து இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.