லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து - 10 பக்தர்கள் பலி!
லாரி மீது பேருந்து மோதியதில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.
லாரி-பேருந்து விபத்து
பீகாரை சேர்ந்த பக்தர்கள் மேற்கு வங்காளத்தில் பல்வேறு கோவில்களுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது பர்த்வான் நகரில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர். விபத்தின்போது சொகுசு பேருந்தில் 45 பேர் இருந்தனர்.
10 பக்தர்கள் பலி
இறந்தவர்களில் 8 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அடங்குவர். ஆறு குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பகுய்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
