பள்ளிகளில் இனி சமஸ்கிருதம் கட்டாயம் - நாட்டிலேயே முதல் முறை..
மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
மழலையர் பள்ளி
ராஜஸ்தான் மாநிலத்தில் மலையர் பள்ளிகளில் சமஸ்கிருதம் மொழி கட்டாயம் என்கிற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
பிகேஜி, எல்கேஜி, யூகேஜி உள்ளிட்ட வகுப்புகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயப் பாடம் ஆகியுள்ளது. இது அங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்கப்படும். இதுகுறித்து அம்மாநில சமஸ்கிருத கல்வித்துறை ஆணையர் பிரியங்கா ஜோத்வட் கூறுகையில்,
சமஸ்கிருதம் கட்டாயம்
"சமஸ்கிருதம் கட்டாயமாக்குவது தொடர்பான பரிந்துரையை இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே மத்திய அரசுக்கு அனுப்பினோம். இதற்கான பாடத்திட்டம், புத்தகம் ஆகியவை தயாரிக்கப்பட்டுவிட்டன.
அமைச்சரவையில் இருந்து ஒப்புதல் வழங்கிவிட்டால் பாடத்தை தொடங்கிவிடுவோம்." என தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளை ஈர்க்கும் வகையில் எளிதாகவும், காமிக்ஸ் வடிவிலும் புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அடிப்படை மொழியாக்கம், இலக்கணம் பயிற்சி கொடுக்கப்படும் என்று மாநில கல்வித்துறை கூறியுள்ளது.