வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 - முதல்வர் அறிவிப்பு!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல்வர் அறிவித்துள்ளார்.
மாதம் ரூ.1,000
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்கவைக்க முதல்வர் நிதிஷ்குமார் தற்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அந்தவகையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுய உதவித் திட்டத்தின் பலன், இப்போது கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவைச் சேர்ந்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண் பட்டதாரி இளைஞர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு
அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், 20 முதல் 25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் http://7nishchay-yuvaupmission.bihar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பட்டதாரிகளுக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.