டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடல்; எந்தெந்த தேதிகளில்? அரசு முக்கிய அறிவிப்பு!
Thai Pongal
Tamil nadu
TASMAC
By Sumathi
டாஸ்மாக் விடுமுறை தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பண்டிகை
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களின் போது டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் கூட்டம் குவிவது வழக்கம். அந்த வகையில், கடந்த பொங்கலன்று ரூ. 850 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் 15ஆம் தேதி பொங்கல் திருவிழா, 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
டாஸ்மாக் விடுமுறை
இதனை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது.
இந்த 3 நாட்களில் மதுபானக் கூடங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.