2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - கலெக்டர் உத்தரவு!

Chennai
By Sumathi Sep 26, 2023 03:53 AM GMT
Report

2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தி

சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபியை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை),

2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - கலெக்டர் உத்தரவு! | Closure Of Tasmac Shops 2 Days Chennai

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-ன் படி

டாஸ்மாக் மூடல்

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச்சார்ந்த பார்கள், எப்.எல்.-2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.-3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும்

டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் தொடர்ந்து மூடப்படும் - முக்கிய உத்தரவு!

டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் தொடர்ந்து மூடப்படும் - முக்கிய உத்தரவு!

எப்.எல்.-3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) மற்றும் எப்.எல்.11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

  மீறினால், மதுபானம் மற்றும் விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.