Friday, May 2, 2025

டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் தொடர்ந்து மூடப்படும் - முக்கிய உத்தரவு!

Namakkal
By Sumathi 2 years ago
Report

3 நாட்கள் மதுபானக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரி விழா

நாமக்கல், கொல்லிமலையில்வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடையையும் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு வரும் ஆக.3ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் தொடர்ந்து மூடப்படும் - முக்கிய உத்தரவு! | Closure Of Tasmac Shops 3 Days Tamilnadu

இந்த விழாவில் அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சி, மூலிகைச் செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது.

டாஸ்மாக் மூடல்

இதனிடையே வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் வரும் ஆக. 12ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.