இன்ஸ்டாவில் பேசியே 1 வாரம்தான்.. கணவனையும், மகனையும் விட்டு இளைஞருடன் சென்ற பெண்
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரே வாரத்தில் இளைஞரை சிறுவனின் தாய் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இன்ஸ்டா பழக்கம்
பெங்களூரு, நெலமங்களா டவுன் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி நேத்ராவதி(30). இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார். லாரி டிரைவரான ரமேஷ், வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் வெளியே தங்கி வந்துள்ளார்.
அந்த நேரத்தில் நேத்ராவதி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார். கணவர் எங்கு தேடியும் கிடைக்காததில்,
தவிக்கும் மகன்
நேத்ராவதி சந்தோஷ் என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஒரு வாரத்திற்கு முன்பாக தான் நேத்ராவதிக்கு சந்தோஷ் அறிமுகம் ஆகியுள்ளார்.
உடனே, கணவர் மற்றும் 8 வயது மகனை தவிக்கவிட்டுவிட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் போலீஸில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.