சொமேட்டோ; வேலைக்கு ஆட்கள் தேவை.. சம்பளம் இல்லை - ரூ.20 லட்சம் தந்து சேரலாம்!
சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சொமேட்டோ
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ. இதில் உணவை கொண்டு ஒப்படைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தலைவர் என்ற பதவிக்கு ஆட்கள் தேவை என்று நிறுவனம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆனால் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சில கண்டிசன்கள்.
அதாவது, இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் ஆண்டு சம்பளம் கிடையாது. அதேபோல, அந்த நபர் ரூ.20 லட்சத்தை முன்தொகையாக, பீடிங் இண்டியா (FEEDING INDIA) அமைப்புக்கு கொடுக்க வேண்டும்.
ஆட்கள் தேவை
இதையடுத்து, 2வது ஆண்டில் இருந்து வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு அதிகமான தொகை சம்பளமாக வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படுபவர் சொல்லும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தீபிந்தர் கோயல் வெளியிட்ட பதிவில், இது வழக்கமான சலுகைகளுடன் இருக்கும் வேலை கிடையாது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஊதியம் பெறும் நோக்கில் இருக்கக் கூடாது.
கற்றல் வாய்ப்பிற்காக இந்தப் பணியைச் செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள், சொமேட்டோவின் உயர் திட்டங்களான பிளின்கிட், ஹைபர்ப்யூர் மற்றும் பீடிங் இண்டியா ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.