Monday, May 12, 2025

இனி பீர், ஒயின் உங்கள் வீடு தேடி வரும்..ஸ்விக்கி, சொமாட்டோ முடிவு - முழு விவரம் இதோ!

Tamil nadu Swiggy Zomato
By Swetha 10 months ago
Report

மதுபான வகைகள் விரைவில் ஹோம் டெலிவரி செய்யப்பட உள்ளது.

பீர், ஒயின்

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆன்லைன் புட் ஆர்டர் மற்றும் டெலிவரி நமது வாழ்வில் ஓர் அங்கமாக மாறியுள்ளது. இந்த துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துவருகிறது.

இனி பீர், ஒயின் உங்கள் வீடு தேடி வரும்..ஸ்விக்கி, சொமாட்டோ முடிவு - முழு விவரம் இதோ! | Soon Alcohol Delivery By Swiggy Zomato

உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் காட்ட வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு புதிய முயற்சிகளை இந்தியாவில் தற்போது இந்நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அசத்தல் அப்டேட்; இனி ரயில் பயணத்தில் zomato-வில் ஆர்டர் செய்யலாம் - IRCTC அறிவிப்பு!

அசத்தல் அப்டேட்; இனி ரயில் பயணத்தில் zomato-வில் ஆர்டர் செய்யலாம் - IRCTC அறிவிப்பு!

தேடி வரும்..

இதையடுத்து, பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்ய சோமேட்டோ, ஸ்விக்கி மற்றும் பிக் பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனி பீர், ஒயின் உங்கள் வீடு தேடி வரும்..ஸ்விக்கி, சொமாட்டோ முடிவு - முழு விவரம் இதோ! | Soon Alcohol Delivery By Swiggy Zomato

ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது. இந்நிலையில், கர்நாடகா, அரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிள் அனுமதி பெற்று மதுபானங்கள் ஹோம் டெலிவரியை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.