Friday, Apr 11, 2025

இனி இந்த 225 நகரங்களில் உணவு டெலிவரி கிடையாது - Zomato பகீர்!

Zomato
By Sumathi 2 years ago
Report

225 சிறிய நகரங்களில் சொமோட்டோ தனது சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

Zomato

Zomato, அதன் மூன்றாம் காலாண்டு வருமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "தற்போதைய தேவையின் மந்தநிலை எதிர்பாராதது, இது உணவு விநியோக லாப வளர்ச்சியை பாதிக்கிறது. ஆனால் இது இருந்தபோதிலும்,

இனி இந்த 225 நகரங்களில் உணவு டெலிவரி கிடையாது - Zomato பகீர்! | Zomato Has Stopped Food Delivery Service

எங்கள் இலாப இலக்குகளை அடைய நாங்கள் வணிகத்தில் சிறப்பாக செயலாற்றி வருவதாக உணர்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது. 800 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 225 சிறிய நகரங்களில் தனது சேவைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சேவை நிறுத்தம்

இந்த நடவடிக்கையைக் குறித்து, கடந்த சில காலாண்டுகளில் இந்த நகரங்களில் உணவு டெலிவரிக்கான சேவைக்கான வரவேற்பு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இல்லை என்றும், இந்த நகரங்களில் நாங்கள் செய்த முதலீட்டில் லாபம் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், எந்தெந்த நகரங்களில் அதன் வசதிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.