தமிழர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது சொமேட்டோ : தமிழில் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியது

Tamil zomato ZomatoSpeakTamil
By Irumporai Oct 19, 2021 06:36 AM GMT
Report

 தமிழகத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் , சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில் நான் இந்தி ஆடர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது.

இதுகுறித்து கஸ்டமர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணம் திரும்பக் கிடைக்காது ; உங்களால் இந்தியில் பிரச்சினையை விளக்க முடியவில்லை.

ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.  

இதை விகாஸ் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பதிவிடவே இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது பல ட்விட்டர் வாசிகள் சோமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில், சமூக சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனத்தை தொடர்ந்து "Please Dont #Reject_Zomato " என அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் , இந்தி தெரிந்திருக்க வேண்டும் என கூறிய ஊழியரை பணி நீக்கம் செய்து விட்டதாகவும், மாநிலத்தின் மொழியை மதிப்பதகாவும் விரைவில் தமிழில் தனி செயலியை உருவாக்குவதாகவும் சொமோட்டோ விளக்கமளித்துள்ளது