ரூ.800க்கு உணவு ஆர்டர் செய்து ரூ.200 கொடுத்தால் போதும் - Zomato ஊழியர் ஷாக் சம்பவம்
சோமாட்டோ உணவு டெலிவரி நிறுவனத்தின் வாடிக்கையாளர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
Zomato
டெல்லியைச் சேர்ந்தவர் வினய் சாத்தி. இவர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில், பிரபல உணவகத்தில் பர்கர் ஆர்டர் செய்தேன். அதற்காக 200 ரூபாய் ஆன்லைனில் செலுத்தினேன். சுமார் அரை மணி நேரம் கழித்து உணவு டெலிவரி செய்யப்பட்டது.

அப்போது உணவு டெலிவரி ஊழியர், "நீங்கள் 700 முதல் 800 ரூபாய் வரை உணவு ஆர்டர் செய்வதாக இருந்தால் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை தவிர்த்து கேஷ் ஆன் டெலிவரி தேர்வு செய்யுங்கள், அப்படி தேர்ந்தெடுத்தால் என்னிடம் 200 ரூபாய் மட்டும் தந்துவிட்டு நீங்கள் உங்கள் ஆர்டரை பெற்றுக் கொள்ளலாம்.
ஊழியர் மோசடி
நீங்கள் உணவை வாங்காமல் மறுத்து விட்டீர்கள் என்று கூறி எங்கள் நிறுவனத்திற்கு கணக்கு காட்டி விடுவேன் என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நபர் இதனை மோசடி எனக் கூறி, சோமட்டோவின் சிஇஓ தீபிந்தர் கோயலையும் Tag செய்திருந்தார்.

இது நல்ல ஆஃபர் தான் என்றாலும் தானும் ஒரு வணிகர் என்பதால், இந்த மோசடியை அம்பலப்படுத்த முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த Zomato சிஇஓ தீபிந்தர் கோயல், ”கண்டிப்பாக இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன். தடுப்பதற்கான முயற்சியில் கவனம் செலுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.