உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 978 பேர் மீது வழக்குப்பதிவு - போலீசார் அதிரடி..!

Case Staffs Zomato File Swiggy Dunzo
By Thahir Mar 31, 2022 05:20 PM GMT
Report

சென்னையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 978 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோமாட்டோ நிறுவனம் சோமாட்டோ இன்ஸ்டன்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த திட்டம் தற்போது வரை சென்னையில் நடைமுறைபடுத்தவில்லை. இது குறித்து அவசர கூட்டம் ஒன்று சென்னை போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையர் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த டெலிவரி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விபத்து மற்றும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாமல் இருப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் காவல்துறை நடத்திய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஸ்விக்கி,சோமாட்டோ மற்றும் டன்சோ நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மீது 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதன் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.