பில்லியனர் கிளப்பில் இணைந்த சோமாட்டோ CEO - சொத்து மதிப்பை பாருங்க..

Money Zomato
By Sumathi Jul 16, 2024 08:58 AM GMT
Report

பில்லியனர் கிளப்பில் சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் இணைந்துள்ளார்.

பில்லியனர் கிளப்

இந்தியாவில் பிரபல உணவு வர்த்தக தளமாக zomato அறியப்படுகிறது. தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் Zomato பங்குகள் அசுர வளர்ச்சி அடைந்தது.

deepinder goyal

இதனால், Zomato நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். Zomato இன் சந்தை மதிப்பை ரூ. 1.9 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

இனி இந்த 225 நகரங்களில் உணவு டெலிவரி கிடையாது - Zomato பகீர்!

இனி இந்த 225 நகரங்களில் உணவு டெலிவரி கிடையாது - Zomato பகீர்!

யார் இந்த தீபிந்த கோயல்? 

இதன் மூலம் தீபிந்தர் கோயலின் சொத்து மதிப்பு ரூ. 8,000 கோடியை கடந்துள்ளது. அந்த நிறுவனத்தின் 4.24% பங்குககளை வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு 36.95 கோடி. இந்த பங்கு விலை உயர்வுக்கு அந்நிறுவனத்தின் Blinkit டெலிவரி தளத்தின் வலுவான செயல்திறன் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பில்லியனர் கிளப்பில் இணைந்த சோமாட்டோ CEO - சொத்து மதிப்பை பாருங்க.. | Zomato Ceo Deepinder Goyal Becomes A Billionaire

பஞ்சாபின் முக்த்சரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் தீபிந்தர் கோயல். கணிதம் மற்றும் கணினியில் B.Tech பட்டம் பெற்றுள்ளார். உணவகங்களில் உணவை ஆர்டர் செய்வதில் சக ஊழியர் சிரமப்படுவதை பார்த்து ஆன்லைன் உணவு விநியோக தளம் தொடங்குவதற்கான எண்ணம் அவருக்கு வந்துள்ளது.

2008ல் தனது சக ஊழியர் பங்கஜ் சத்தாவுடன் சேர்ந்து Foodiebay.com ஐ முதலில் தொடங்கி, 2010ல் Zomato என மறுபெயரிட்டது குறிப்பிடத்தக்கது.