தடுப்பூசியால் ஆட்டிசம் அதிகரிக்கிறதா? Zoho-வின் ஸ்ரீதர் வேம்பு சர்ச்சை!

Autism
By Sumathi Oct 29, 2025 07:09 AM GMT
Report

ஸ்ரீதர் வேம்பு தடுப்பூசிக்கு எதிராக வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஸ்ரீதர் வேம்பு பதிவு

Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவு ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், குழந்தைகளுக்கு "அதிகமான தடுப்பூசிகள்" வழங்கப்படுவதாக கூறினார்.

sridhar vembu

மேலும் மெக்கல்லோ அறக்கட்டளையின் அறிக்கையை பரிசீலிக்குமாறு பெற்றோரை வலியுறுத்தினார். அந்த அறிக்கை 300-க்கும் மேற்பட்ட முடிவுகளைஆய்வு செய்ததாகவும், குழந்தை பருவ தடுப்பூசிகள் ஆட்டிசத்திற்கு ஒரு முக்கிய ஆபத்து காரணி என்று கூறியுள்ளது.

முன்னதாக பீட்டர் மெக்கல்லக் மற்றும் ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் இணைந்து எழுதிய இந்த ஃபவுண்டேஷனின் அறிக்கை, போலியான அறிவியல் கருத்துகளின் தொகுப்பாக உள்ளது. வேக்ஃபீல்ட், 1998 ஆம் ஆண்டில் லான்செட் மருத்துவ இதழில் வெளியிட்ட கட்டுரை திரும்பப் பெறப்பட்டது.

விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பெண் - பரபரப்பு சம்பவம்

விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பெண் - பரபரப்பு சம்பவம்

வெடித்த சர்ச்சை

எம்.எம்.ஆர் (தட்டம்மை, அம்மை, ரூபெல்லா) தடுப்பூசி மற்றும் ஆட்டிசம் இடையே தவறான தொடர்பை அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆய்வே தவறானது என்று பின்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு, வேம்புவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், ஸ்ரீதர் வேம்பு எனும் சனாதன நச்சுக்கிருமி! குழந்தைகளுக்கு அதிகளவு தடுப்பூசிகள் கொடுக்கப்படுவதால் தான் ஆட்டிசம் பாதிப்பு வருகிறது என்று சொல்லி தடுப்பூசிக்கு எதிராக பரப்புரை செய்யும் அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் பதிவை பகிர்ந்துள்ள சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இந்த ஆய்வை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இளம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அதிகளவில் தரப்படுகின்றன. தடுப்பூசி போடும் நடைமுறை இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆட்டிசம் பாதிப்பும் அதிகரித்து வருகிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.