கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் காரணம்; பாஜகவிடம் சிக்கிட்டாரு - பல்டி அடித்த சீமான்
கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் காரணம் என சீமான் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம்
கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பேசிய சீமான், இது ஒரு விபத்து.

இது விஜய்யையே பெரிதும் பாதித்திருக்கும் என்று தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்,
“தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் முதலில் சேலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஏன் நாமக்கல், கரூருக்கு மாற்றப்பட்டது. கரூர் சம்பவம் நடைபெற முதல் காரணமே விஜய்தான்.
சீமான் ஆவேசம்
விஜய் வருவதால்தான் அங்கு அவ்வளவு கூட்டம் கூடி விபத்து ஏற்பட்டது. ஆனால் விபத்திற்கு காரணமான விஜய் மேல் வழக்குப்பதியாமல் கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதும், புஸ்ஸி ஆனந்த் தனது முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுகிறார். இது சிபிஐ தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கைதானே.
விஜய் பாஜகவோடு கூட்டணி அமைக்க மறுத்தால் விஜய் மீது, ஆதவ் அர்ஜுனா மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்யும்” என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
செவ்வாய்–புதன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: செப்டம்பர் 01முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு IBC Tamil
ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல் IBC Tamil