கோர தாண்டவமாடும் பசி, பட்டினி - யானைகளைக் கொன்று உணவளிக்க அரசு முடிவு!
200 யானைகளைக் கொன்று உணவளிக்க ஜிம்பாப்வே முடிவு செய்துள்ளது.
கடும் வறட்சி
ஆப்பிரிக்காவில் எல் நினோவால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நமீபியா, மலாவி, சாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் தீவிரமான வறட்சி ஏற்பட்டுள்ளது.
வழக்கமான மழைப் பொழிவில் 20% மட்டுமே மழைப் பொழிவு இருக்கும். பயிர்கள் சரியாக வளராததால் 30 மில்லியன் மக்கள் வரை உணவுப் பாதுகாப்பின்மையை உணர்வார்கள். 62 மில்லியன் மக்கள் வறட்சியால் பாதிக்கப்படுவர் என்று ஐநா கணித்துள்ளது.
அரசு முடிவு
1988ல் முதல் முறையாக ஜிம்பாப்வே மொத்தமாக விலங்குகளைக் கொல்ல திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஜிம்பாப்வே நாட்டில் 200 யானைகளை வேட்டையாடி மக்களுக்கு உணவளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு வனத்துறைத் தெரிவித்துள்ளது.
55,000 யானைகள் வாழும் தகுதியுள்ள ஜிம்பாப்வே காடுகளில் 84,000 யானைகள் இருக்கின்றன. எனவே, மக்களுக்கு உணவளிப்பதையும் கடந்து, காடுகளில் நெரிசலைக் குறைக்கவும் யானைகள் மொத்தமாகக் கொல்லப்படுவது அவசியம் எனத் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்படும் யானைகளின் இறைச்சி வறட்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.