Thursday, May 1, 2025

பாகனை மிதித்து கொன்ற யானை - நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ

Kerala Elephant
By Karthikraja 10 months ago
Report

 பாகனை யானை மிதித்து கொன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூணார்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் . இங்கு சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுகிறது. இதற்காக அடிமாலி என்ற பகுதியில் 57 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து கொண்டிருந்தார். 

பாகனை மிதித்து கொன்ற யானை - நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ | Kerala Elephant Killing Trainer Viral On Internet

சுற்றுலா பயணிகள் கூடியிருந்த வேளையில் பயணிகள் சவாரி ஏறுவதற்கு எதுவாக யானை நிற்காததால் கட்டளையை பின்பற்ற சொல்லி பாகன், யானையை பிரம்பால் தொடர்ந்து தாக்கினார்.

உயிரிழப்பு

இதனால் ஆக்ரோஷமடைந்த யானை, பாகன் பாலகிருஷ்ணன் மீது ஏறி சரமாரியாக ஏறி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.