40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வறட்சி -யானைகளை கொன்று தின்னும் அவலம்..!
ஜிம்பாப்வேவில் கடும் வறட்சியால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உணவளிக்க 200 யானைகளைக் கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜிம்பாப்வே
தென் ஆப்பிரிக்க நாடுகளான நமீபியா , ஜிம்பாப் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. போதிய மழையின்மை ,நிலத்தடி நீர்மட்ட குறைவு, கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதனால் நாட்டு மக்கள் மட்டுமின்றி வனவிலங்குகள் உள்ளிட்டவை உணவின்றி தவித்து வருகிறது.போதிய உணவு கிடைக்கத்தால் வனவிலங்குகள் மக்கள் குடியிருப்பை நோக்கிப் படையெடுக்கிறது.இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கடும் வறட்சியால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உணவளிக்க 200 யானைகளைக் கொல்ல ஜிம்பாப்வே நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
வரலாறு காணாத வறட்சி
இது குறித்து ஜிம்பாப்வே தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ கூறுகையில், உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 200 யானைகளைக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
அதேபோல அரசு தரப்பிலும் மக்களுக்கு இறைச்சி வழங்கப்படும். மேலும் வேட்டையாடப்படும் விலங்குகளின் மாமிசங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுமார் 83 யானைகள் உட்பட 700 வன உயிரினங்களைக் கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.