இந்தியாவை தோற்கடிச்சா..ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவரை கல்யாணம் பண்ணிக்கிறேன் - நடிகை பகீர்
இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே நபரை திருமணம் செய்துகொள்வதாக பாகிஸ்தான் நடிகை ட்விட் செய்துள்ளார்.
ZIM VS IND
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-2 பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணியுடன் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணியுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணியை ஜிம்பாப்வே வீழ்த்த வேண்டும்.
நடிகை பகீர்
அவ்வாறு நடந்தால் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்வதாக பாகிஸ்தான் பிரபல நடிகை ஷின்வாரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தற்போது இவரது பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match ?
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
இதற்கு நெட்டிசன்கள் ஜிம்பாப்வே தோற்றுவிடும் நீங்கள் திருமணமே செய்ய முடியாது என கலாய்த்து வருகின்றனர். மேலும், பலமுறை நடிகையின் கணிப்பு தவறாக போன பதிவை ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.