16 வயதில் ஆயிஷாவுக்கு திருமணம்..2 விவாகரத்து - முன்னாள் காதலர் சொன்ன பகீர் தகவல்
பிக்பாஸ் ஆயிஷாவின் கடந்த கால வாழ்க்கை குறித்து அவரது முன்னாள் காதலர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆயிஷா
பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தினமும் ஒவ்வொரு சம்பவத்திற்கு குறையில்லை. முதல் வாரத்தில் இருந்தே கலை கட்டி வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தவர்தான் ஆயிஷா.
இவர் பிரபல தொலைக்காட்சி சீரியலின் மூலம் பிரபலமானவர். இந்நிலையில் இதில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை குறித்து பேசிய நிலையில், ஆயிஷா மட்டும் அது தொடர்பாக எந்த உண்மையயும் கூறவில்லை.
பகீர் தகவல்
இந்நிலையில், ஆயிஷா குறித்து அவரது முன்னாள் காதலர் தேவ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதில், ஆயுஷாவுக்கு இளம் வயதிலேயே திருமணமான நிலையில், அதனைத் தொடர்ந்து, 18 வயதில் இரண்டாவது திருமணத்தை செய்துள்ளார்.
அந்த திருமணமும் சரிவராத காரணத்தால் அவரைப்பிரிந்து, சென்னையில் படிக்க வந்த இடத்தில் தன்னை சந்தித்து காதலிக்க தொடங்கினார். எனது மூலமாக தொடர்களில் நடிக்க தொடங்கிய பின்னர், என்னை அவர் கைவிட்டு விட்டார்.
தற்போது வேறொருவருடன் காதல் வயப்பட்டு இருப்பதாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.