நிழலே விழாத நாள் - இன்று நிகழும் அறிய வானிலை நிகழ்வு - தமிழகத்தில் காணலாம்
வானிலை பல அறிய அற்புதங்களை தன்னுள் கொண்டுள்ளது.
Zero Shadow Day
அப்படி ஒன்று தான் ஜீரோ ஷேடோ டே(Zero Shadow Day). தமிழில் நிழல் இல்லாத நாள் அன்று சூரியன் நண்பகலில் பூமிக்கு நேரே செங்குத்தாக வரும். அதன் விளைவாக பூமியின் அச்சு சாய்வு (Axial Tilt) சுமார் 23.5 டிகிரியாக சூரியனைச் சுற்றி வரும்.
இந்த நிகழ்வு Equator அருகில் உள்ள இடங்களில் மிகவும் தென்படுகிறது. அங்கு சூரியன் இந்நிகழ்வின் போது நேரடியாக மேலே செல்கிறது. இந்த அறிய நிகழ்வானது ஒரு வருடத்தில் இரண்டு முறை நிகழ்கிறது. இந்திய வானியல் சங்கத்தின் (ASI) படி, இது வழக்கமாக சூரியன் அதன் உச்சநிலையை அடையும் போது நிகழ்கிறது, குறிப்பிட்ட இடங்கள் மற்றும் latitudes அடிப்படையில் நாட்கள் மாறுபட்டு நிகழும்.
இந்த நிகழ்வு தனித்துவமான வானியல் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. பூமியின் அச்சு சாய்வு, சூரியனைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதை மற்றும் ஆண்டு முழுவதும் சூரிய ஒளியின் மாறும் கோணங்களைப் பற்றி மக்களுக்குக் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வு செயல்படுகிறது.
தமிழகத்தில்...
இந்தியாவின் பெங்களூரு நகரில், இந்த "ஜீரோ ஷேடோ டே" இன்று, புதன்கிழமை(24-4-24) மதியம் 12:17 முதல் 12:23 மணிக்குள் நடைபெற உள்ளது. வடக்கே 13.0 டிகிரி latitude'இல் அமைந்துள்ள பெங்களூரு நகரம், ஆண்டுக்கு இரு முறை இந்த நிகழ்வை அனுபவிக்கிறது.
பெங்களூருவை போல இந்த நிகழ்வு தமிழகத்தின் கன்னியகுமரியில் 10 ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 1 மதியம் 12:21 முதல் 12:22 மணிக்குள் நிகழ்கிறது குறிப்பிடத்தக்கது.