இரண்டாக உடையும் ஆப்பிரிக்கா கண்டம் - மாறும் இந்தியா வரைப்படம் - தலைகீழாக மாறும் கேரளா வானிலை
ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாக உடையப்போவதாக அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடையும் ஆப்பிரிக்கா
பருவநிலை மாற்றம் மனித சக்தியால் தடுக்க முடியாத இயற்கை நிகழ்வாகும். மனிதர்களை அதனை படித்து தெரிந்து கொள்ள மட்டுமே முடியும். வேண்டுமென்றால் வருவதை நம்மால் கணிக்க முடியுமே தவிர, மனித குலம் இன்னும் தடுக்கும் அளவிற்கு சக்தியானதாக மாறவில்லை.
உலகின் பல இடங்களில் கொட்டி தீர்க்கும் மழை, வெடித்து சிதறும் எரிமலைகள், கொந்தளிக்கும் கடல்கள், வட்டி வதைக்கும் வெயில் என இயற்கையின் வழியில் தான் நாம் வாழ்க்கையை வாழ முடிகிறது. புவி மாற்றம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெறு கொண்டே தான் இருக்கின்றன.
அப்படி ஒரு தகவல் தான் தற்போது உலக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் குறிப்பிட்டு, பிரியும் நிலப்பரப்பில்நீர் புகுந்து அங்கே பெரிய கடல் ஒன்றே உருவாக இருப்பதாக கூறியுள்ளனர்.
உடையும் ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்கா கண்டங்களை சேர்ந்த நாடுகளான ஸாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகள் பிரிந்து, அவற்றிற்கு இடையே கடல் பகுதிகள் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்ரிக்காவில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ஒரு நிலப்பரப்பு பிரிந்து இரண்டாவது உருவாகுவது ரிப்ட் எனப்படும். ஆப்பிரிக்காவில் நடைபெறும் இந்த ரிப்ட்டானது, 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிகழ்ந்துள்ளது.
எத்தியோப்பியா பாலைவனத்திலும் நில பிரிவு ஏற்பட்டிருப்பதால், இன்னும் சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது கடலாக மாறும் என்கின்றனர். இந்த பூமி தட்டுகளின் நகர்வுகள் காரணமாக, பிரியும் ஆப்பிரிக்கா கண்டத்தின் ஒரு பகுதி நகர்ந்து வந்து இந்தியா மீது மோதும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நடைபெறும் புவியியல் மாற்றம் காரணமாக, இந்தியாவின் வரைபடமே மாறும் என்றும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் குளிர் பிரதேசங்களாக மாறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.