மரத்தை கட்டிப்பிடிக்க..வெறும் ரூ.1500 - Queue'வில் நிற்கும் மக்கள் - அப்படி என்ன இருக்கு?

Karnataka
By Karthick Apr 18, 2024 04:04 PM GMT
Report

புதிது புதிதாக பல வியாபாரங்களை பல நிறுவனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

Forest Bathing Experience

அப்படி ஒரு புது வியாபாரம் தான் தற்போது இணையத்தில் பலரையும் கவனிக்கவைத்துள்ளது. அது என்னவென்றால் Forest Bathing Experience. நீங்கள் Forest Bathing Experience என்றவுடன் பெரிதாக எதுவும் கற்பனைக்கு சென்று விட வேண்டாம்.

hugging-trees-1500-charge-people-interested

இந்த வியாபாரமே உங்களை சிலரிக்கவைக்கும். அதாவது ஷின்ரின் யோகு(Shinrin Yoku) என்கிற ஜப்பானிய முறையான வனக் குளியல்(Forest Bathing) நடைமுறையில் வருகிறது.

hugging-trees-1500-charge-people-interested

வனக் குளியல் என்பது உணர்ச்சி அனுபவங்களில் கவனம் செலுத்தி, காடுகளின் வழியாக மெதுவாக, கவனத்துடன் நடப்பதை உள்ளடக்கியது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது என்றும் ஒட்டுமொத்த வாழ்வை மேம்படுத்துகிறது என்று ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

1500

இதனை செய்வதற்கு தான் பெங்களூரு சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ.1500'ஐ வசூலிக்கிறது. மரத்தை கட்டிப்பிடித்து, மரங்கள் நிறைந்த பகுதியாக தான்தோன்றி தனமாக சுற்றி வர 1500'யாம்.

கொரோனவை விட 100 மடங்கு வேகம் - கேரளாவில் வெடித்த நோய் தோற்று பரவு

கொரோனவை விட 100 மடங்கு வேகம் - கேரளாவில் வெடித்த நோய் தோற்று பரவு

இதனை கண்ட பல நெட்டிசன்கள் வறுத்தெடுக்க துவங்கிவிட்டனர். மரங்களை கட்டிப்பிடித்து, நடந்து வர இவர்களுக்கு எதுக்கு 1500 ரூபாய் கொடுக்கவேண்டும் என பலரும் வினவியும் வருகிறார்கள்.

hugging-trees-1500-charge-people-interested

இந்த போஸ்ட் இணையத்தில் வெளியான நிலையில், சிட்டி வாழ்க்கையால் சலித்துப்போன பலரும் புக்கிங் செய்து குயூவில் நிற்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.