கடலுக்கடியில் மூழ்கிய பூமியின் 8-வது கண்டம் - எங்கே உள்ளது தெரியுமா?
எட்டாவது கண்டம் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜிலாண்டியா
உலகின் பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலில் ஏற்கனவே பல மர்மங்கள் உள்ளன. இப்போது அதில் ஒரு கண்டமே ஒளிந்திருப்பதாக கூறுகின்றனர். உலகின் எட்டாவது கண்டமான ஜிலாண்டியா, பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால், ஒரு கண்டம் தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது 1 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
8-வது கண்டம்
ஜிலாண்டியா கண்ட பகுதியாக நினைக்கும் இடத்தில் இருந்து பழமையான பாறை மற்றும் மேலோடு மாதிரிகள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, சுமார் 375 ஆண்டுகளுக்குப் பிறகு, புவியியலாளர்கள் 2017 இல் இந்த கண்டத்தைக் கண்டுபிடித்தனர்.
அடுத்த முயற்சியாக அது எப்போது நீருக்கடியில் சென்றது? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.