நிலவிலிருந்து பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக கீழே விழுந்த ‘ஓரியன்’ - வைரலாகும் வீடியோ

NASA
By Nandhini Dec 13, 2022 06:02 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

நிலவிலிருந்து புறப்பட்டு பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக கீழே விழுந்த ‘ஓரியன்’ விண்கலத்தின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நாசா அனுப்பிய  ‘ஓரியன்’ விண்கலம்

2025க்குள் மனிதனை நிலவுக்கு அனுப்பும் நாசாவின் ‘ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ், சோதனை முயற்சியாக அனுப்பப்பட்ட ஆளில்லா ‘ஓரியன்’ விண்கலம் பாதுகாப்பாக பூமியை வந்தடைந்தது.

கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்ட இவ்விண்கலம், நேற்று முன்தினம் புறப்பட்டு, இன்று பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கியது.

இந்த Artemis I இன் ஆளில்லா Orion Spacecraft 25 நாட்கள் விண்வெளியிலிருந்து பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக கீழே விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், பல சென்சார்களுடன் கட்டப்பட்ட மேனிக்வின்களிலிருந்து தரவு இப்போது மீட்டெடுக்கப்பட உள்ளது. சந்திரனைச் சுற்றி 1.4 மில்லியன் மைல் பயணத்திற்குப் பிறகு தற்போது இந்த விண்கலம் திரும்பியுள்ளது.

தற்போது இந்த விண்கலம் பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக கீழே விழுந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நாசாவிற்கு பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

orion-space-craft-nasa