அண்ணாமலைக்கு இனி Z பிரிவு பாதுகாப்பு - என்ன காரணம்?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இனி Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு பயம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், Y பிரிவு பாதுகாப்பில் உள்ள அவருக்கு Z பிரிவாக உயர்த்தி மாற்றப்படுகிறது. ஆகவே, 20ற்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர் எனவும்,
அவர் வீடு, தங்கும் இடம், செல்லும் இடம் போன்ற அனைத்திலும் 24மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
Z பிரிவு
மாவோஸ்டுகள், மத தீவிரவாதிககள் போன்றவர்களிடம் இருந்து இவருக்கு மிரட்டல் வந்ததால் இந்த பாதுகாப்பு வழங்கி இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக மத்திய உள்துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள்
அண்ணாமலை வீடு உள்ளிட்ட இடங்களில் வந்து சோதனை செய்து சென்றுள்ளனர். ஆகவே, இதற்கான ஒப்புதலும் கையெழுத்தும் அண்ணாமலை இடம் இருந்து பெறப்பட்டுள்ளது.